எம்மை பற்றி

நாம் இந் நாட்டின் பிரஜைகள். நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த, அனைத்து துறைகளையும் சார்ந்த தனி நபர்கள். எமது தாய்நாடு புதியதொரு திசையில் செல்ல வேண்டிய நேரம் இதுவென நம்புகின்றோம். புதியதொரு தலைமைத்துவத்தின் கீழ் புதியதொரு இலங்கையை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இதுவென நம்புகின்றோம். நாம் அனைவரும் கரங்கோர்த்து இத் தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்தால் மட்டுமே இம்மாற்றம் சாத்தியம். இவ் அனைத்தையும் ஒருவரால் தனியாக செய்ய முடியாது. ஆனால் ஒருவரால் எம்மை நிச்சயம் வழிநடத்த முடியும். அந்த ஒருவர் சஜித் பிரேமதாச மட்டுமே என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதனை நிஜமாக்கிட எமது யோசனைகளையும் நேரத்தையும் பங்களிப்பு செய்வோம்.